2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாகன விபத்தில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் படுகாயம்

Gavitha   / 2014 ஜூலை 31 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி குடமுறுட்டி பாலத்தடியில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் வாகனம் குடை சாய்ந்ததில் வலயக் கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பூநகரியில் இடம்பெற்ற பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடலில் கலந்துகொண்ட பின்னர், பூநகரி – பரந்தன் வீதி வழியாக வலயக் கல்விப் பணிமனைக்குத் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து குடைசாய்ந்துள்ளது.

இதில் சாரதி சிறுகாயங்களுக்குள்ளாகியதுடன், பணிப்பாளர் படுகாயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X