2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'சவால்களுக்கு மத்தியில் பல்கலை செல்லும் மாணவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்'

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

சவால்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் செல்லும் முல்லைத்தீவு பாரதி வித்தியாலய மாணவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்கள் இறுதி யுத்தத்தின்போது மரணமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தமது தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். இப்பொழுது இந்தக் குழந்தைகளின் குடும்பத்தினர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இந்தக் கிராமம் முழுவதுமே போரால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கடும் சவால்களுக்கு மத்தியில் இங்கு கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய ஒவ்வொரு மாணவரும் போற்றப்பட வேண்டியவர்கள். இந்த மாணவர்களின் எதிர்காலக் கல்விச் செயற்பாட்டிற்குப் பொருளாதார உதவிகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு எமது உறவுகள் அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக புலம்பெயர் உறவுகள் இவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன். இவர்களைப் போன்று வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான வன்னி மாணவர்களுக்கும் எமது உறவுகள் மனமுவந்து உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் வேண்டுகின்றேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X