2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் வைத்து கஞ்சா பொதியுடன் இராணுவ வீரர் ஒருவர் வெள்ளிக்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். வசாவிளான் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் விடுமுறையில் சென்ற சமயம், வவுனியா பொது மலசலகூடப்பகுதியில் பொலிஸாரின் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 1 கிராம் 680 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை இன்று சனிக்கிழமை (02) வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X