2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியா ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு நேற்று சனிக்கிழமை (3) இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வச்சுறுத்தல் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் உடனடியாக வவுனியா பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி ஊடகவியலாளரின் கையடக்கத் தொலைபேசிக்கு இருவேறு கையடக்கத் தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பை மேற்கொண்டுள்ள சந்தேகநபர்கள், தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று பொலிஸ் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X