2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உப்புக்குளம் ஸ்ரீஇராஜ இராஜேஸ்வரி கோவிலில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின் உப்புக்குளத்தில் அமைந்துள்ள திருவானைக்கூடம் ஸ்ரீஇராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலின் உட்புற  கதவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03)  இரவு இனந்தெரியாதோரினால்  உடைக்கப்பட்டு பணம்  திருடப்பட்டுள்ளதாக   மன்னார் பொலிஸ் நிலையத்தில் அக்கோவில் பிரதம குரு இன்று திங்கட்கிழமை (04) காலை  முறைப்பாடு செய்துள்ளார்.

இன்றையதினம் (04) காலை கோவிலுக்குச் சென்றபோது,   கோவிலின் உட்புற கதவு உடைக்கப்பட்டுக் காணப்பட்டதுடன், கோவிலிலிருந்த அலுமாரியும் உடைக்கப்பட்டு அம்மனின் பட்டாடைகள் கீழே கொட்டப்பட்டுக் கிடந்ததாக  இக்கோவில் பிரதம குரு தெரிவித்தார். 

மேலும், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 50,000  ரூபாய் பணமும் களவாடப்பட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மோப்ப நாய்கள்  சகிதம் மன்னார் பொலிஸார் குறித்த கோவிலுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X