2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆடை உற்பத்தி நிறுவனத்தின் கிளை திறப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் முதலாவது கிளை திங்கட்கிழமை (04) மன்னார் மூர்வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கெய்க்கா சர்வதேச நிறுவனத்தின் நிதி உதவியுடன் மன்னாரில் திறக்கப்பட்டுள்ள இவ்வுற்பத்தி நிறுவனத்தினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் 30 பேருக்கு தற்காலிக நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் ஆடை உற்பத்தியை அதிகரிக்கும் வகைளிலும், வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகைளிலும் புடவைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் முதலாவது கிளை மன்னாரில் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் நவாஸ் முஸ்தபா, பிரதம எந்திரி விஜயரத்தின உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X