2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மழைநீர் சேகரிப்புத்திட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி கல்லாறுக் கிராமத்தில் கொக்கோகோலா நிறுவனத்தின் நிதி உதவியுடன் யு.என் கபிரெட் நிறுவனத்தினால் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் செயற்றிட்டத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு கல்லாறு பொதுநோக்கு மண்டபத்தில செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது. 

வருடம் முழுவதும் குடிநீர் வழங்க வேண்டிய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறுப் பிரதேசத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்புத்திட்டமானது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதென கிளிநொச்சி மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

 'தற்போது நிலவுகின்ற வரட்சியால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்;றன.  இது எமக்கு ஒரு பாரிய சவாலாக அமைந்துள்ளது. எமது  மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கல்லாறுக் கிராமத்திற்கு வருடம் முழுவதும் குடிநீர் வழங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்;று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டமானது இந்தப்பிரசேத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதுடன் இது எமக்;கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ள என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மழைநீர் சேகரிப்புத்திட்டத்தின் கீழ் 120 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ஒவ்வொரு நீர்த்தாங்கிகளும் மேலும் பாடசாலைகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் ஐந்து நீர்த் தாங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் மழை காலத்தில் நாள் ஒன்றிற்கு 4 இலட்சத்து 10 ஆயிரம் லீற்றர் நீரினைச் சேகரிக்க முடியும் என திட்ட செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X