2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குழந்தைகளின் பெயர்களில் பயிர்ச் செய்கை மோசடி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீரினைக் கொண்டு இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறுதானியச் செய்கையில், கமக்கார அமைப்புக்கள் சில மோசடி செய்துள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா புதன்கிழமை (06) தெரிவித்தார்.

குழந்தைகளின் பெயர்களில் பதிவுகளைச் செய்தே, குறித்த அமைப்புக்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மேற்படி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறுதானியச் செய்கைகளுக்கான கொடுப்பனவுகள் எவையும் இதுவரையில் வழங்கப்படவில்லையென திருவையாறு கமக்கார அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் கேட்டபோதே, பிரதி விவசாயப் பணிப்பாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரணைமடுக் குளத்தில் இருக்கும் நீரினைக் கொண்டு, கிளிநொச்சி மாவட்டத்தில், இபாட் திட்டத்தின் கீழ் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானியச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயர்களிலே பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ள முடியும். எனினும், மேற்படி திட்டத்தில் சட்டத்திற்கு முரணான விதத்தில் 6 வயதுப்பிள்ளையொன்றின் பெயரிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது மோசடியில் ஈடுபடும் நடவடிக்கையாகும். அத்துடன், இத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் கூட மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனையடுத்தே, மேற்படி திட்டத்தின் பயிர்ச் செய்கைகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X