2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாகேந்திரபுரத்தில் ஐஸ்கட்டித் தொழிற்சாலை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் 8 மில்லியன் ரூபாய் செலவில் ஐஸ்கட்டித் தொழிற்சாலையொன்று நாகேந்திரபுரத்தில் அமைக்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார்.

யு.என்.எச்.சி.ஆர், சேவாலங்கா ஆகிய நிறுவனங்களின் நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல்லினை கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (01) நாட்டியதாகத் தெரிவித்தார்.

நாகேந்திரபுரம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 1000 மீனவர்கள், தாங்கள் பிடிக்கும் மீன்களை பாதுகாப்பாக வைத்து சந்தைப்படுத்த வசதியில்லாத காரணத்தினால் அவற்றினை குறைந்த விலைக்கே விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், அவர்கள் போதியளவு வருமானத்தினைப் பெறமுடியாத நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தினையும் முன்னேற்ற முடியாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில், மேற்படி மீனவர்களின் நிலைப்பாடு குறித்து கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு, எமது திணைக்களத்திற்கு எடுத்துக் கூறியதினையடுத்து, இது தொடர்பாக எமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக மேற்படி தொழிற்சாலை அமைக்கப்பெறுவதற்கு நிதியுதவி கிடைத்துள்ளது.

இத்தொழிற்சாலை அமைக்கப்பட்ட பின்னர், நாளொன்றிற்கு 1000 கிலோ ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X