2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சமூக மேம்பாட்டிற்கு வணக்கஸ்தலங்களின் பங்களிப்பும் செயற்பாடும்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டப் பண்பாட்டுப் பேரவை, சர்வமத சமாதானப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'சமூக மேம்பாட்டிற்கு வணக்கஸ்தலங்களின் பங்களிப்புக்களும் செயற்பாடும்' எனும் தொனிப்பொருளிலான மதகுருமார்களிற்கான கருத்தரங்கொன்று கரைச்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது.

மகிந்த சிந்தனையின் கீழ் கரைச்சிப் பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், மதத் தலங்கள் மற்றும் சமூக நலன் தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற நான்கு வளவாளர்கள் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

இச்செயலமர்விற்கு 4 மதத்தினையும் சேர்ந்த மதகுருமார்கள் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்தவர்கள் 28 பேர் மட்டும் கலந்துகொண்டனர்.

இந்தச் செயலமர்வில், வணக்கஸ்த்தலங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது, சமூகத்தில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை வணக்கஸ்த்தலங்கள் எவ்வாறு அணுகி அதனை ஆற்றுப்படுத்தல், மக்களின் அபிவிருத்தியில் வணக்கஸ்த்தலங்கள் எவ்வாறு உதவிகள் செய்யலாம் என்பவை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இச்செயலமர்விற்கான நிதியுதவியினை வேள்ட் விசன் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X