2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுகாதாரமற்ற முறையில் குளிர்பானம் விற்றவருக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிச் சந்தைப் பகுதியில் சுகாதார நடைமுறைகளுக்கு ஒவ்வாத வகையில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து வந்தவருக்கு 1000 ரூபா தண்டம் விதித்ததுடன், குளிர்பானம் செய்வதற்கு பயன்படுத்திய உபகரணங்களை அழிக்கும்படியும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.

இந்நபர், சுகாதாரமற்ற முறையில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருந்த போது, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் புதன்கிழமை (06) கைதுசெய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று வியாழக்கிழமை (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து நீதவான் தண்டம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X