2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறுவர் உரிமை விழிப்புணர்வு செயலமர்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டச் செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலுள்ள மக்களுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு பாரதிபுரம் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் ராஜரட்ணம் செந்தூரன் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.

இதன்போது, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எவ்வாறு என்பது தொடர்பாகவும், சிறுவர்களுக்கு இழைக்கப்படும் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும், சிறுவர்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெற்றோர்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பது தொடர்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X