2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று 8ஆம் திகதி மன்னாரில் ஆராம்பமாகின.

இன்று 8ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றது.

இம்முறைப்பாடுகளில் மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும் 45 கிராம சேவையாளர் பிரிவுகளில் 230 பேர் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இன்று வெள்ளி மற்றும் நாளை சனி ஆகிய இரு தினங்களில் 17 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 125 பேரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ள விசாரணைகளில் 21 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 60 பேரும் மறுநாள் திங்கட்கிழமை (11) மடு உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் இடம்பெறவுள்ள விசாரனைகளின் போது 7 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 45 பேரும் இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ளனர்.

இதற்கமைய இன்று வியாழக்கிழமை (8) மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கட்டிடத்தில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த அமர்வு இடம்பெற்றது.

மூன்று பேர் கொண்ட குறித்த ஆணைக்குழுவில், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் மனோ ராமநாதன், எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சியங்கள் இடம்பெற்றது.

இந்த சாட்சியமளிப்பின் போது மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பனி இம்மானுவேல் செபமாலை அடிகளார், மன்னார் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அருட்பணி எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம், அரச சட்டத்தரணி பத்மல் வீரசிங்க டி சில்வா, மன்னார் சட்ட ஆணைக்குழுவின் சட்டத்தரணி டினேஸ் குமார் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

நாளை சனிக்கிழமை (9) தொடர்ந்தும் இதே இடமாகிய மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாள் அமர்வு தொடர்ந்து இடம்பெறும். இன்றைய அமர்வில் 65 பேரின் முறைப்பாடுகளையும் நாளை சனிக்கிழமை அமர்வில் 60 பேரின் முறைப்பாடுகளும் விசாரணைகள் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X