2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியாவில் வெடி பொருட்கள் மீட்பு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை, வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகத்திட்டத்திற்கு நிலத்தை தோண்டும்போதே இவ் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

ஆர்.பீ.ஜி ஷெல்கள் - 2, மோட்டர் ஷெல்கள் - 2, கைக்குண்டு - 1, மற்றும் ரவைகள் என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X