2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் விசாரணைகள்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் விசாரணைகள் இன்று சனிக்கிழமை (09) மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.

நேற்று  வெள்ளிக்கிழமை (08) முதல் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இவ்விசாரனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) வரை நடத்துவதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ன.

மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலக பிரிவுகளில், 3 பிரதேச செயலக பிரிவுகளில் மட்டுமே இவ்விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாந்தை மேற்கு, மன்னார், மடு ஆகிய பிரதேசங்களில் உள்ள 45 கிராம அலுவலகர்கள் பிரிவுகளில் உள்ள 230 பேர் இவ் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளும் ஜானதிபதியின் ஆணைக்குழுவிற்கு மெக்ஸ் வெல் பராக்கிரம பரனகம தலைமையில் மனோ ராமநாதன், எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் மாந்தை மேற்கு பிரிவில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற விசாரனைகளின் போது 65  பேரும,; இன்று சனிக்கிழமை 60 பேரும,; ஞாயிற்றுக்கிழமை மன்னார் பிரதேச செயலக பிரிவில் 60பேரும், திங்கட்கிழமை மடு பிரதேச செயலக பிரிவில் 45 பேரும் மொத்தமாக 230 பேர் இவ் விசாரனைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விசாரனைகள் முதல் மூன்று தினங்களும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரைக்கும், இறுதி நாள் காலை 9 மணி தொடக்கம் 1 மணிவரையும்  இவ்ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 நேற்று வெள்ளிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள கட்டத்தில் நடைபெற்ற விசாரனைகளின் போது விசாரனைக்காக 65 பேர் அழைக்கப்பட்டிருந்த போதும் 47 பேர் மாத்திரமே ஆணைக்கு முன் சாட்சியமளித்தனர்.

அத்துடன்  25 பேர் வெள்ளிக்கிழமை (08) விசாரணைக்காக தங்கள் விண்ணப்பத்தை புதிதாக பதிவு செய்திருந்தனர்.

நடை பெற்றுக்கொண்டிருக்கும் விசாரனைகளில் அதிகளவில் விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பாகவும் பின் யுத்தம் முடிவு காலத்தில் இவர்களில் பலர் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த போது காணால் போனது தொடர்பாகவும் அதிகமான முறைப்பாடுகள் செய்யப்பட்டடிருந்தன.

அத்துடன் நாளை ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் நடை பெறும் இவ் ஆணைக்குழு  முன்னிலையில் முக்கியமானவர்கள் சாட்சியமளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X