2025 ஜூலை 17, வியாழக்கிழமை

த.க. வெங்கலச்செட்டிகுளம் பிரதேச கிளை நிர்வாகத் தெரிவு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தின்; செங்கலச்செட்டிகுளம் பிரதேசத்துக்கான தமிழரசுக் கட்சியின் பிரதேச கிளை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேசக் கிளையின் செயலாளர் சி.சிவசோதி நேற்று திங்கட்கிழமை  தெரிவித்தார்.

செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் விசேட கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு நடைபெறவுள்ள நிலையில், கட்சிப் புனரமைப்பும் புதிய நிர்வாகத் தெரிவும்  வேகமாக நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே வவுனியா, வவுனியா வடக்கு பிரதேசக்கிளைகளின் புதிய நிர்வாகங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இதன்போது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்        -ம.ஆனந்தராசா
துணைத்தலைவர்     -எஸ்.ஞானசோதி
செயலாளர்        -அ.வில்வராசா
துணைச் செயலாளர்    - க.யோகராசா
பொருளாளர்        - எஸ்.கபூர்

உறுப்பினர்களாக - க.சுந்தரலிங்கம், மு.வீரராஜ், து.செல்லையா,
அப்துல் நஜீப், பொ.சிவஈசன், அ.தர்மலிங்கம், சிவபாலன், செல்வராசா, மயில்வாகனம், த.பூபாலசிங்கம், என்.நடராஜா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X