2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தர்மபுரம் கல்லூரி மைதானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானக் கிணற்றிலிருந்து திங்கட்கிழமை (11) மீட்கப்பட்ட ஆயுதங்கள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீனின் உத்தரவிற்கமைய, இராணுவத்தினுடைய குண்டு செயலிழக்கும் பிரிவால் அழிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தனர்.

மேற்படி பாடசாலையின் அயலவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை மைதானத்தைத் துப்புரவு செய்யும் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) மைதான கிணற்றில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், அக்கிணற்றிலிருந்து ரி – 56 ரக துப்பாக்கி, தானியங்கித் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சிலவற்றை மீட்;டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதன்போது, மேற்படி ஆயுதங்களை அழிக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். அதற்கமைய இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினரைக்கொண்டு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X