2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சடலத்தை கொடுப்பதில் சிக்கல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, விசுவமடு பேருந்து நிலையக் கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்ட சடலத்தை யாரிடம் கொடுப்பது என்பது தொடர்பில் தொடர்ந்து சிக்கல் நிலை நீடித்து வருவதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.

மேற்படி பேருந்து நிலையத்திலிருந்து எஸ்.ஜோசப் (வயது 41) என்பவரது சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். திருமணப் பதிவுள்ள முதலாவது மனைவி சடலத்தை ஏற்க மறுத்துள்ளார்.

இரண்டாவது மனைவி, சடலத்தைப் பொறுப்பேற்பதாகக் கூறிய போதும், அவர் திருமணப் பதிவு செய்திருக்காத காரணத்தால் அவரிடம் ஒப்படைக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆகையால், நீதிமன்றத்தில் உதவியை நாடி சடலத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X