2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடனுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிய சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.

இது பற்றி கிளிநொச்சிப் பொலிஸார் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வீதியில் நின்றிருந்த 2 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் இம்மாதம் ஆரம்பப் பகுதியில் திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

இந்நிலையில், யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடமொன்றில், கடந்த 10 ஆம் திகதி வீதிக்கடமையில் ஈடுபட்ட கோப்பாய்ப் பொலிஸார், மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துச் சோதனையிட்ட போது, மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவரிடம் மோட்டார் சைக்கிள் தொடர்பில் எந்த ஆவணங்களும் இருக்கவில்லை.

தொடர்ந்து, மேற்படி நபரைக் கைது செய்த கோப்பாய் பொலிஸார், சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த மோட்டார் சைக்கிள் கனகபுரம் பகுதியில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து, மேற்படி சந்தேகநபரையும் மோட்டார் சைக்கிளையும் கோப்பாய் பொலிஸார், கிளிநொச்சிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, மேற்படி சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆஜர்ப்படுத்தியதாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X