2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மடு திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு அன்னையின் ஆவனித் திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில், திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன என்று மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்தார்.

மடு அன்னையில் ஆவனித் திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருவிழா திருப்பலி, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குடிநீர், சுகாதாரம் ஆகியவை தொடர்பாக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருவிழா காலத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க மடுவில் விசேட பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு 750 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா நீதிமன்றம் ஒன்று மடுவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்றம் 12ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடு அன்னையின் திருவிழாவிற்கு, நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X