2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய்க்கான முன்னோடி பரிசோதனை

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களை கண்டறிவதற்கான முன்னோடி பரிசோதனை வெள்ளிக்கிழமை (19) மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் சனத்தொகை சேவைகள் லங்கா (பி.எஸ்.எல்) நிறுவனத்தில் அதன் மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஏ.ரசாக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு குறித்த மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களை கண்டறிவதற்கான முன்னோடி பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த பரிசோதனையின் போது பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் கொழும்பு தேசிய புற்றுநோய் பணியகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுளள்தாக, மன்னார் சனத்தொகை சேவைகள் லங்கா (பி.எஸ்.எல்) நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஏ.ரசாக் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அதிதிகளாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.ஆர்.யூட், சனத்தொகை சேவைகள் லங்கா (பி.எஸ்.எல்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் டாக்டர். அஜித் மென்டிஸ், தேசிய புற்றுநோய் பணியகத்தின் வைத்தியர் ஏ.எஸ். அனுஸாந்தன், மாவட்ட உதவிச்செயலாளர் என். பரமதாஸ், மடு உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.சந்திரபால, மாவட்ட உளநல வைத்தியர் டாக்டர். சுகந்தி கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .