2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாங்குளத்தில் புதிய தபால் நிலையம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


முல்லைத்தீவு, மாங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தபால் நிலையம் நேற்;று செவ்வாய்க்கிழமை  (22)  திறந்துவைக்கப்பட்டது.

முன்னர் இயங்கிவந்த தபாலகம் யுத்தத்தால் அழிவடைந்த நிலையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் புதிய தபாலகத்துக்கான கட்டடம் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன்,  சவூதி நாட்டுப்பிரதிநிதிகள், ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர், வடமாகாண ஆளுநரின் இணைப்பாளர் ஐ.எஸ்.எம்.முகைதீன்,  வடமாகாண அஞ்சல் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .