2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கள விஜயம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று செவ்வாய்க்கிழமை(30) யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்;பட்ட ஈச்சலவக்கை மற்றும் சன்னார் ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் சென்றிருந்தனர்.

முதலில் ஈச்சலவக்கை கிராமத்துக்குச்சென்ற குழுவினர் அங்கிராம மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர்.

குறிப்பாக ஈச்சலவக்கை கிராமத்தில் உள்ள பாடசாலையில் காணப்படுகின்ற பிரச்சினைகள், போக்குவரத்துச் சேவைகள் சீரின்மை, குடிநீர் பிரச்சினைகள், வீதி சீரின்மை, மின்சார வசதியின்மை, ஆரம்ப வைத்திய சேவைகள் இல்லாமை,  குளங்கள்; புனரமைப்புச் செய்யப்படாமை, வயல் நிலங்கள் துப்பரவு செய்யப்படாமை, நன்னீர் மீன்பிடியில் உள்ள பிரச்சினைகள், புதிதாக வழங்கப்பட்ட காணிகளுக்கு பாதைகள் இல்லாமை, மக்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் இராணுவம் கைப்பற்றியுள்ளமை உட்;பட ஈச்சலவக்கை கிராம மக்கள் எதிர்நேக்கும் சகல பிரச்சினைகளும் முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு அந்த மக்கள் தெரியப்படுத்தினர்.

இதேவேளை ஈச்சலவக்கை பகுதியில் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும்  கிராமமக்கள் குறித்த குழுவினருக்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில், பிரச்சினைகளை கேட்டறிந்த குழுவினர் மக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .