2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பு கோரி முன்பள்ளி சிறார்கள் போராட்டம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி, பிரமந்தனாறு முன்பள்ளி சிறார்கள் தங்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தரக்கூடிய போராட்ட ஊர்வலம் ஒன்றை தமது முன்பள்ளி அமைந்துள்ள சூழலில் புதன்கிழமை (01) நடத்தினார்கள்.

முன்பள்ளி சிறுவர்களின் பெற்றோர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் சிறுவர் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

முன்பள்ளி அமைந்துள்ள வளாகத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 2013 ஆம் ஆண்டு முன்பள்ளி மாணவியொருவர் உயிரிழந்திருந்தார்.

இதனால் தங்களுக்கு பாதுகாப்பான விதத்தில் கிணற்றை அமைத்து தரவேண்டும், முன்பள்ளியை சூழ பாதுகாப்பான வேலிகள் அமைத்து தரவேண்டும் மற்றும் வீதியில் தாங்கள் சென்று வருவதற்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லையெனவும் அவற்றை அமைத்து தரும்படி முன்பள்ளி சிறார்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .