2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளாலிப்பகுதியில் கால்நடைகளின் குடிநீர்  தேவைக்காக 50 ஆயிரம் ரூபாய்  செலவில் இரண்டு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்  தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள இந்த தொட்டிகளுக்கான நிர்மாண வேலை விஜயதசமி தினமான இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிளாலிப்பகுதியிலுள்ள 5 பட்டிகளை சேர்ந்த மாடுகள், மேய்ச்சல் தரைகளுக்கு செல்லும்போது குளங்களில் நீரில்லாமையால் குடிநீருக்காக பெரும் அவதிப்படுகின்றன.

மேலும் குடிநீருக்காக அலையும் மாடுகள், மிதிவெடி அபாயமுள்ள பகுதிகளுக்கு சென்று வெடிகளில் அகப்பட்டு அவயவங்களை இழத்தல் மற்றும் இறக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.

இதனால், கால்நடைகளின் குடிநீர் பிரச்சினைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளாலி பகுதி மக்கள் கோரிக்கைகள் முன்வைத்தனர்.

இதனையடுத்து, தற்போது குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைப்பு வேலைகளை கிளாலி கமக்கார அமைப்பு மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .