2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நந்திக்கடல் மீனவர்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

முல்லைத்தீவு, வட்டுவாகல், நந்திக்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் 2000 இற்கு மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.

நந்திக்கடல் பகுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி கடலில் கடந்த 4 நாட்களாக மீன்கள் இறந்து கரையொதுங்குகின்றன. இதுவரையில் 60 ஆயிரம் கிலோவிற்கு அதிகமான மீன்கள் கரையொதுங்கியுள்ளன.

அத்துடன், ஏற்கெனவே வரட்சி காரணமாக இப்பகுதியில் இறால் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் தொழில் இழந்த நிலையில் இருந்தனர். தற்போது, நீரின் உவர் நிலை அதிகரித்து நீரில் உப்பு செறிவு அதிகரித்து மீன்கள் இறந்து கரையொதுங்குகின்றன.

இதனால் இக்கடல் பகுதியை நம்பி தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் பாதிப்படைந்துள்ளதாக அவர் கூறினார். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு வடமாகாண மீன்பிடி துறை அமைச்சர் பா.டெனீஸ்வரனுடன் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .