2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் அதிகளவு வெடிபொருட்கள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 17.6 சதுர கிலோமீற்றர் பரப்பளவு நிலப்பரப்பில் வெடிபொருட்கள் அகற்ற வேண்டி இருப்பதாக கண்ணிவெடிகள் பற்றி விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டு அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளாலி, முகமாலை, இத்தாவில், வேம்படுகேணி, கண்டல்காடு ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவு வெடிபொருட்கள் காணப்படுகின்றன.

யுத்த காலப்பகுதியில் தொடர்ந்து 6 வருடங்கள் யுத்தம் நடைபெற்ற சூனிய பிரதேசமாக மேற்படி இடங்கள் இருப்பதால் வெடிபொருட்கள் அகற்றுவதற்கு சவால்கள் நிறைந்த பிரதேசமாக மேற்படி பிரதேசங்கள் காணப்படுகின்றன.

மேற்படி பிரதேசங்களில் வெடிபொருட்கள் அகற்றும் போது, உயிர்ச்சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் 3.462 சதுரகிலோமீற்றர் பரப்பளவிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 14.245 கிலோமீற்றர் பரப்பளவிலும், மன்னார் மாவட்டத்தில் 16.08 கிலோமீற்றர் பரப்பளவிலும், வவுனியா மாவட்டத்தில் 4.855 கிலோமீற்றர் பரப்பளவிலும் வெடிபொருட்கள் அகற்றவேண்டியுள்ளதாக அந்த புள்ளிவிபர தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .