2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பூவரசங்குளம் - கரும்புள்ளியான் வீதி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மாந்தை கிழக்கில் பூவரசன்குளம் - கரும்புள்ளியான் இணைப்பு வீதி திருத்தும் பணி ஆரம்பமாகியுள்ளதென மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தலைவர் அ.தனிநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்த வீதியை திருத்துவதற்காக மாந்தை கிழக்கு பிரதேசசபையால், மாகாணசபையிடம் விடப்பட்ட கோரிக்கைக்கு அமைய கிடைக்கப்பெற்ற ஒன்பது மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இரண்டு கிராமங்களையும் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் அழைத்து இவ்வீதி வேலைக்காக கிடைக்கப்பெற்ற நிதி விபரம், அதனூடாக செய்யப்படவுள்ள வேலைகளின் விபரங்கள் உட்பட ஒப்பந்தக்காரரால் பொறுப்பேற்கப்பட்ட சகல விடயங்களும்  தெளிவுபடுத்தப்பட்டன.

சிறந்த முறையில் இவ்வேலைகளை நிறைவேற்றுவதற்காக பொதுமக்களின் கண்காணிப்பும் அபிப்பிராயங்களும்  சிறந்த முறையில் காணப்படவேண்டும் என்பதற்காக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்வீதி திருத்தப்பணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .