2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு

Gavitha   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்தி சங்கம் நடாத்தும் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான இலவசகருத்தரங்கு, வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் த.நிறோசன் தெரிவித்தார்.

எமது சங்கம் கல்விக்கரம் செயற்றிட்டத்தின் ஊடாக, மாணவர்களின் கல்வி வளர்ச்சியை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை வருடா வருடம் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டு நிலையங்களில் இலவச கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

எனவே தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .