2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டும் வைபவம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பாகிஸ்தான் அரசின் நிதி உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் 200 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் இன்று சனிக்கிழமை(11) காலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜென்ரல் காசிம் குறைசி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜென்ரன் ஜீ.ஏ.சந்திர சிறி, மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்க, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் பிரதேச செயலாளர்கள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர், உட்பட கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த 200 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றதோடு புதுக்குடியிருப்பு முஸ்ஸீம் ம.வி பாடசாலையில் விசேடகூட்டம் ஒன்றும் இடம் பெற்றது.

இதன் போது அமைச்சர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பஷில் ராஜபக்ஷ மற்றும் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜென்ரல் காசிம் குறைசி ஆகியோர் உரையாற்றியதோடு தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதற்கான அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் கட்டடத்திறப்பு விழா நிகழ்வும் இன்று மதியம் இடம்பெற்றது.

மஹிந்த சிந்தனையின் கீழ் 52 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறுவப்பட்டுள்ள நிர்வாக அலகு, உயர் தர விஞ்ஞான ஆய்வு கூடங்கள், கணினி ஆய்வு கூடம், விவசாய ஆய்வு கூடம், மனைப்பொருளியல் ஆய்வு கூடம் ஆகிய வசதிகளுடனான கட்டடத் தொகுதி கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் வழிகாட்டலின் கீழ் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, ரிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், முத்தலீப் பாபா பாரூக் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .