2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இறம்பைக்குளம் அந்தோனியார் தேருக்கு தீவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தின் இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தின்  தேர் இனந்தெரியாதோரால் இன்று ஞாயிற்றுக்கிழமை  (12) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தேவாலய  நிர்வாகம் வவுனியா பொலிஸில்  முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தேர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் கதவு திறந்திருப்பதையும் அங்கிருந்து புகை வருவதையும்  பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்கு  இன்றையதினம் (12) அதிகாலை வந்தவர்கள் அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில்,  தேர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, தேர் எரிந்துகொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக தண்ணீரினால் தீயை இவர்கள் அணைத்தபோதிலும்,  தேரின் கீழ்ப்பகுதி எரிவடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .