2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்சார தூண்கள் நாட்டும் பணி ஆரம்பம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் பிரதேசத்துக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கும் ஆரம்ப நடவடிக்கைகள் மாந்தை கிழக்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் தயாந்தா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் கிராமத்தில் கடந்த 80 வருடங்களாக மின்சாரம் இல்லாமல், இக்கிராம மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தயாந்தா இதன் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு மக்கள் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்கள் தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாரூக் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

மேலும் இவ்விடயம் தொடர்பில், உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும்  சிராட்டிக்குளம் கிராம மக்கள் சார்ப்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக நேற்று (11) முதல், மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திலிருந்து சிராட்டிக்குளம் வரையிலான பகுதியில் மின்சார தூண்கள் நாட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .