2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி பி.இரகுநாதன் இன்று செவ்வாய்க்கிழமை  (14) தெரிவித்தார்.

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம்வரையான 9 மாத காலப்பகுதியில் கஞ்சா, ஹெரோயின் வைத்திருத்தல், கள்ளச்சாராயம் மற்றும் கசிப்பு உற்பத்தி, சட்டவிரோத மதுபான விற்பனை, வயது குறைந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுடன் தொடர்புடைய 139 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஜுலை, ஓகஸ்ட், செப்டெம்பர் ஆகிய 03 மாதங்களிலும் மாத்திரம் கஞ்சா வைத்திருந்த 24 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 03 கிலோ 35 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.  இதேகாலப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்தும் 1,065 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  குறிப்பாக கேரளா கஞ்சா மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஏனைய இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. சோதனைகளின்போது  அதிகமாக கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே போதைப்பொருள் பயன்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .