2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு

George   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன்


சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி கிளிநொச்சி விழிப்புலனற்றோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  ஊர்வலம், கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து கூட்டுறவு சங்க மண்டபம் வரை புதன்கிழமை(15) இடம்பெற்றது.

இந்த ஊர்வலத்தில் விழிப்புலனற்றோர்கள் பல்வேறு பதாகைகளை தாங்கியவாறு கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தை தொடர்ந்து கூட்டுறவாளர் மண்டபத்தில் விழிப்புலனற்றோரின் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் விழிப்புலனற்றோர்களின் குடும்பங்கள் சமூகத்தின் முன்னுதாரணமான குடும்பங்களாக திகழ்கின்றன. அவர்கள் தங்களை வாழ்வில் வளப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களை முன்னுதாரமாகக்கொண்டு அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .