2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, கோவில் சின்னப்புதுக்குளம் பகுதியின்  2ஆம் ஒழுங்கையிலுள்ள வெற்றுக்காணியொன்றில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து கைக்குண்டொன்று நேற்று வியாழக்கிழமை மாலை  மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தனியாருக்கு சொந்தமான இக்காணி, பல வருடங்களின் பின்னர் குடியேறுவதற்காக துப்பரவு செய்யப்பட்டது. இந்நிலையில், கிணற்றிலுள்ள சேற்றை  அள்ளியபோது கைக்குண்டு காணப்பட்டது.

துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள், 119 இலக்கத்தின் மூலமாக பொலிஸாருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தினர்.  இதைத் தொடர்ந்து,  சம்பவ இடத்துக்கு சென்று கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும், இரவு வேளையாகியதால் அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன்,  விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்படுமெனவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .