2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார் டக்ளஸ்

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் ஸ்டேசன் வீதி சாந்திபுரம் பகுதியில் பனை அபிவிருத்தி சபைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட காரியாலய நிர்மாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் பார்வையிட்டார்.

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் வெள்ளிக்கிழமை (17) கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபைக்கு மாவட்ட காரியாலயமொன்று இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட காரியாலயம் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

கட்டுமானப்பணிகளை பார்வையிட்ட அமைச்சர்; அதுதொடர்பிலும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் கட்டிட வளாகம் மற்றும் சுற்றுப்புற சூழலின் சுத்தம் சுகாதாரம் தொடர்பில் அமைச்சர் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணித்ததுடன் வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.

இதன்போது பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட உதவி அமைப்பாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .