2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்தை பகைப்பதனால் எதனையும் சாதிக்கமுடியாது : டக்ளஸ் தேவானந்தா

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரசுடன் பகைப்பதன் ஊடாகவோ விரோதமாக செயற்படுவதன் ஊடாகவோ எதனையும் சாதிக்கமுடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார்.

மன்னார் எழுத்தூர் தோட்டக்காடு பொதுமண்டபத்தில் சனிக்கிழமை(18) பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செந்தூர் முருகன் கோவிலின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு நிதியுதவி பெற்றுத் தரப்படும். இந்நிலையில் நாம் சொல்வதையே செய்வோம். செய்வதையே சொல்வோம். இதைவிடுத்து உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றல்களுக்கும் எமது மக்கள் எதிர்காலங்களில் எடுபட்டு விடக்கூடாது.

அவ்வாறு உணர்ச்சிப் பேச்சுக்களை பேசி அரசுடன் பகைத்துக் கொள்வதன் ஊடாகவோ விரோதமாக செயற்படுவதன் ஊடாகவோ எமது மக்களுக்கான எவ்விதமான உதவித் திட்டங்களையும் அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாது.

இந்நிலையில் இருக்கிறதைப் பாதுகாத்துக் கொண்டு அதிலிருந்து முன்னேற்றம் காணுவதே எமது நோக்காகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

முன்பதாக தோட்டக்காடு செந்தூர் முருகன் ஆலயத்தின் சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.

இதனிடையே இக்கோவிலின் பயன்பாட்டுக்கென கணினித் தொகுதியொன்று பெற்றுத் தரப்படுமென்றும்கூறினார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட உதவி அமைப்பாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .