2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியா, வடக்கு மக்களுக்கான நடமாடும் சேவை ஆரம்பம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை வெள்ளிக்கிழமை (17) வவுனியா புளியங்குளம் இந்து மகா வித்தியாலயத்தில் ஆரம்பமாகியது.

வவுனியா, வடக்கு மக்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட இந்நடமாடும் சேவையை, வட மாகாண முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

இந்நடமாடும் சேவையின் ஒரு பகுதியாக, மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சு, புளியங்குளம் வலயக் கல்வி பணிமனையில் தனது சேவையை வழங்கியது.

இதன்போது கிராம அபிவிருத்திச் சங்கங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் கனகராயன்குளம் வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு, ஒரு இலட்சத்து 90,000 ஆயிரம் ரூபாவும் கனகராயன்குளம் வடக்கு பெரியகுளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு 2 இலட்சத்து 75,000 ஆயிரம் ரூபாவும் சுழற்சி முறைக்கடன் திட்டத்துக்காக அமைச்சர் பா. டெனிஸ்வரனினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், குருகுலராஜா, பா.டெனிஸ்வரன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் ஆர். இந்திரராஜா, எம்.தியாகராசா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .