2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விசேட பயிற்சி நெறி

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குற்பட்ட இரசாயன உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கான நான்கு நாள் விசேட பயிற்சி நெறியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முல்லைத்தீவு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.ரஜனிகாந்த், வெள்ளிக்கிழமை(17) தெரிவித்தார்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இரசாயன உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் முயற்சியாளர்களுக்கு மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, சவர்க்காரம், கற்பூரம் உள்ளிட்ட பெருட்களின் உற்பத்தி, பாதுகாப்பு, சந்தை வாய்ப்பு என்பனவற்றிற்கான பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி நெறியானது, வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெறும். இப்பயிற்சி நெறியில் இருபதுக்கும் அதிகமான தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் எனவும் இவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .