2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்கம்பத்தில் ஏறியவர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன், எம்.றொசாந்த்


கிளிநொச்சி, முறிகண்டி, செல்வபுரம் பகுதியில் 70 அடி உயரமான மின்கம்பத்தில் ஏறி, அங்கிருந்து குதிக்க முயற்சித்த குடும்பஸ்தர் ஒருவரை, கடந்த வெள்ளிக்கிழமை (17) மாலை கைது செய்ததாக மாங்குளம் பொலிஸார் கூறினர்.

செல்வபுரத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான நடராசா வசந்தன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இவர் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது, பொலிஸாரிடமிருந்து தப்பிய சந்தேகநபர், மின்கம்பத்தில் ஏறி கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், அவ்விடத்துக்குச் சென்றஇராணுவத்தினர், குறித்த நபருடன் சமரசமாக பேசி, அவரை கீழே இறக்கியுள்ளனர். இதனையடுத்து மாங்குளம் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .