2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, பெண்களை தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 114 குடும்பங்களுக்கு பல்லின கலப்பு கோழிக்குஞ்சுகளை வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறய்வா, ஞாயிற்றுக்கிழமை (28) வழங்கி வைத்தார்.

இந்த கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு  மன்னார் உயிலங்குளம் விவசாய ஆராய்சி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட 114 குடும்பங்களுக்கு 20 கோழிக்குஞ்சுகள்  வழங்கி வைக்கப்பட்டன.

கோழிக்குஞ்சுகளை வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் பிரதேச சபையின் உப-தலைவர் அந்தோனி சகாயம், வட மாகாண சபை உறுப்பினர் எம்.ரயிஸின் இணைப்பாளர் ஏ.எல்.முசாதீக் ஆகியோர் வழங்கினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .