2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கடல் கடும்கொந்தளிப்புடன் காணப்படுவதையடுத்து மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஞாயிற்றுக்கிழமை (28) அறிவித்தல் விடுத்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அறிவித்தலை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.மரியராசா, சமாசத்தின் கீழுள்ள அனைத்து சங்கங்களுக்கும் அறிவித்து மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் கொக்குளாய் தொடக்கம் நல்லதண்ணீர் தொடுவாய் வரை 3000க்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .