2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சி தர்மபுரத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி தர்மபுரம் 7ஆம் யுனிற் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டவர் தர்மபுரம் 6ஆம் யுனிற்றைச் சேர்ந்த பொன்ராசா ஜெகதீஸ்வரன் (வயது 38) என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் திங்கட்கிழமை (29) தெரிவித்தனர்.

இதனையடுத்து, சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்த புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லையென உறவினர்கள் தெரிவித்ததாகவும், எனினும் அவரைக் காணவில்லையென முறைப்பாடு எதுவும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணை கைவிட்டுவிட்டு, தர்மபுரம் பகுதியை சேர்ந்த பிறிதொரு பெண்ணொருவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .