2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தொற்றுநோய் பரவாதிருக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாணத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கின்ற மக்கள் மத்தியில்  தொற்றுநோய்கள் பரவாதிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு  உலர் உணவுப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை (30) வழங்கப்பட்டன. இதன்போதே அவர் இதைக் கூறினார்.

வடமாகாணசபையால்  உலர் உணவுப் பொருட்கள் தற்போது வழங்கப்பட்டுவருகின்றன.

நாகர் இலுப்பைக்குளம், சமணங்குளம், ஆச்சிபுரம், கல்நாட்டினகுளம், எல்லப்பர் மருதங்குளம் பகுதிகளில் பொதுக்கட்டடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்படுகின்றன.

மேலும்,  மழைக்காலத்தில் கிணற்று நீர் அசுத்தமடைந்து காணப்படும். எனவே, கொதித்தாறிய நீரை பருகுமாறும்  அவர் கூறினார்.

அத்துடன்,  இடைத்தங்கல் முகாம்களில் மாவட்ட சுகாதார திணைக்களத்தினால் நடமாடும் வைத்திய சேவைகளும் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.  
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .