2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இதுவும் வீடுதான்?

George   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமடு, ரெட்பாணா கிராமத்தில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடு இல்லாமல் தற்காலிக கொட்டகைகளில் வசித்து வருகின்றனர்.

தகரகங்களை கூரையாகக் கொண்ட இந்தக் கொட்டகைகள் வரட்சியான காலத்தில் வசிக்க முடியாத அளவுக்கு வெப்பமாக இருப்பதுடன், மழை காலத்தில் வீடுகளுக்கு நீர் ஊறும் நிலையும் உள்ளது.

2010ஆம் ஆண்டு மீளக்குடியேறிய இந்த பகுதி மக்களுக்கு கடந்த 4 வருடங்களாக வீட்டுத்திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை.

புள்ளிகள் அடிப்படையில் முன்னுரிமையளிக்கப்பட்டு, வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டமையால் இந்த மக்களுக்கு இதுவரையில் வீடுகள் கிடைக்கவில்லையெனவும், ஆயினும் தற்போது தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளுக்குள் இவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .