2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவு நகரில் டெங்கு பரவும் அபாயம்

George   / 2015 ஜனவரி 01 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு நகரத்தில் நீர் வழிந்தோடக்கூடிய சீரான வாய்க்கால்கள் அமைப்படாததன் காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கின்றது. 

நீண்ட நாட்களாக குட்டை போல நீர்  தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்புகள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு நோய்த்தாக்கம் ஏற்படும் அபாகரமான நிலைமை காணப்படுகின்றது. 

போரினாலும் ஆழிப்பேரலையினாலும் பெருமளவு அழிவுகளை எதிர்கொண்ட இந்நகரத்தில் அழிவடைந்த பல கட்டடங்களில் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக நுளம்புகளின் பெருக்கம் இந்நகரத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபை ஆகியன வாய்க்கால்கள் புனரமைக்கும் மற்றும் புதிததாக அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக செய்ய முடியாதுள்ளது எனவும் நிதியுதவி கிடைக்கும் தருணத்தில் வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .