2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்பில் முறைப்பாடு

Sudharshini   / 2015 ஜனவரி 03 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் முகவராக செயற்பட்டு வருவதால், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளை முடக்கி, தையல் பயிற்சி நிலையங்களையும் மூடியுள்ளதாக, மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், அரசாங்க அதிபர் அரச அதிகாரிகளையும் மக்களையும் அச்சுறுத்தி ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுமாறு வற்புறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் சிலிட்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 57 தையல் பயிற்சி நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தையல் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றுவந்த நிலையில்,  பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் 1140 பயிற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 21 பயிற்சி நிலையங்களும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 14 பயிற்சி நிலையங்களும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 6 பயிற்சி நிலையங்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 9 பயிற்சி நிலையங்களும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 7 பயிற்சி நிலையங்களும் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில், அரசாங்க வேளைத்திட்டத்தின் கீழ் சிலீட்டா அமைப்பின் நிதி உதவியுடன் இடம்பெற்று வந்த குறித்த தையல் பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் அரசாங்க அதிபர் மூடியுள்ளதாகவும் பயிற்சி நிலையங்களில் உள்ள தையல் இயந்திரங்களை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நடு நிலமை வகிக்காது ஜனாதிபதிக்கு முகவராக செயற்பட்டு வருவதோடு மக்களையும் ஜனாதிபதிக்காக  வேளை செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் குறித்த செயற்பாட்டை கண்டித்தும் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் மற்றும் தையல் பயிற்சி நெறிகள் ஆகியவற்றை மீண்டும் ஆரம்பிக்க கோரியும் தையல் பயிற்சி நிலைய மாணவர்கள், மன்னார் மக்கள்; ஒன்றினைந்து எதிர்வரும் திங்கட்கிழமை (5) காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .