2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சாப்பிடாமையாலேயே அனந்தி மயங்கிவிழுந்தார்: மாவை

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 04 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சாப்பிடாமையினாலேயே மயங்கி விழுந்தார் என்று  தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை  (4) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'நான் அனந்தியுடன் கதைத்தபோதுதான்; மயங்கி விழுந்தார் என்பதில் எந்த உண்மையும் இல்லை.  இன்று காலையிலும் அவர் வைத்தியரிடம் தனக்கு முன்பும் அவ்வாறு வருவதாக கூறியுள்ளார். அதைக்கேட்டு நான் ஆறுதல் அடைந்தேன். அன்றையதினமே தொலைபேசி நின்றவுடன் பிள்ளைகளுடன் நான் மீள கதைத்தேன். அதற்கு அவர்கள் அம்மா 11 மணிவரைக்கும் சாப்பிடவில்லை என தெரிவித்தனர்.

ஆகவே, நாங்கள் ஒருகாலமும் எங்கள் வரலாற்றில் யாரையாவது திட்டுவதோ, மிரட்டுவதோ வாடிக்கையல்ல. பத்திரிகையில் வரும் செய்திகளை வைத்தே நான் அவரிடம் இவ்வாறான கருத்துக்களை தவிர்க்குமாறு கோரியிருந்தேன். இந்நிலையில், நான் கேரியதையும் அவர் மயங்கி விழுந்ததையும் சேர்த்து நான் சொன்னவுடம் அவருக்கு மயக்கம் வந்ததான கருத்து தவறானது. மாறானது. இச்செய்திகளை கண்டிக்கின்றேன் என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக்;கூட்டமைப்பு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு  ஆதரவளிப்பதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் காணப்படுகின்றா என கேட்டபோது,

ஒவ்வொருவருக்கும் கருத்துக்கள் இருப்பதை ஜனநாயகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த கருத்து முரண்பாடுகள் கட்சி கூட்டங்களில் கதைத்து தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதன் முடிவில் எல்லா கருத்துக்களையும் திரட்டி எதிரணியின் பொதுவேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதற்கான வேலைகளை ஆரம்பிக்கவேண்டும் என்பதனால், வேறு எந்த விதமான குழப்பங்களுக்கும் இடமளியாது அனைத்து மக்களையும் வாக்களிக்க செய்கின்ற பணியில் கட்டயாமாக ஈடுபடுமாறு இந்தக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம். ஆகவே 8ஆம் திகதி மக்கள் அதிகாலையில் எழுந்து வாக்களிக்க வேண்டும்.

மேலும்,  ஒரு சிலர் அரசு பக்கம் தாவுகின்றார்கள் என தகவல் எமக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், சில அறிக்கைகள் வெளியில் வந்துள்ளது. அவை பற்றி அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு அவர்கள் மீதும் ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .