2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் தேர்தல் வன்முறைகள் பதிவாகவில்லை: வீரசிங்க

Gavitha   / 2015 ஜனவரி 06 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மினன்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை (06) முல்லைத்தீவு மாவட்டத்தில் எதுவித தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லையென்று, முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பன்துல வீரசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (06)  தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வியாழக்கிழமை (08) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு ஆகிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில், 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 450க்கும்  மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 80க்கும் மேற்பட்ட பொலிஸார், முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த வெளிமாவட்டங்களில் இருந்தும் தேர்தல் கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதுடன், 18 பொலிஸ் நடமாடும் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனவே, வியாழக்கிழமை (08) பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பில் ஈடுபட்டு, வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்து பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறும் அவர் கூறினார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .