2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

George   / 2015 ஜனவரி 07 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் சிறந்த முறையில் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கிளிநொச்சி மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும்; மாவட்டச் செயலாளருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன், செவ்வாய்க்கிழமை (06) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் 96 வாக்களிப்பு நிலையங்கள் மாவட்டத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன.  வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குச்சீட்டுகள் வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆளணியினர், புதன்கிழமை (07) தங்களுடைய வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்பார்கள்.  

சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் பழைய மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதியில் வருகை தந்து வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.  

அதற்கான பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அலுவலர்களுடன் செல்வதற்கான பொலிஸார் மற்றும் போக்குவரத்து என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .